Advertisment

13 மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்

 13 fishermen arrested; Sri Lankan Navy again atrocity

Advertisment

தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 13 தமிழக மீனவர்கள் மீண்டும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட மீன்பிடிதுறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 13 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை சிறை பிடித்துச் சென்ற சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அண்மையில் ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் மீனவர் பிரச்சினையில் தீர்வு காண வேண்டும் என தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு பலமுறை தமிழக முதல்வர் கடிதம் எழுதி இருந்த நிலையில், தொடர்ச்சி சம்பவமாக இன்றும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.

fisherman Pudukottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe