Advertisment

பிறந்து 13 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு ஏற்பட்ட நிலை; பெற்றோர்கள் அதிர்ச்சி

A 13-day-old baby girl tragedy in krishnagiri

Advertisment

பிறந்து 13 நாட்கள் ஆன பெண்குழந்தை உயிரிழந்ததால் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கல்லாவி பகுதியைச் சேர்ந்தவர் சுபதேவ். இவரது மனைவியின் பெயர் லாவண்யா. சுபதேவ் மற்றும் லாவண்யா தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை பிறந்து 13 நாட்கள் ஆன நிலையில் திடீரென குழந்தை மயங்கியதால் பெற்றோர்கள் அச்சம் கொண்டனர். உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவமனையில் குழந்தையைப்பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாகத்தெரிவித்தனர்.

Advertisment

இதனிடையே குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக புகார் அளிக்கப்பட்டதைத்தொடர்ந்து காவல்துறையினர்வழக்குப் பதிவு செய்தனர். குழந்தையைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

பிறந்து 13 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை உயிரிழந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Krishnagiri police
இதையும் படியுங்கள்
Subscribe