12th student  try to lost life youth sent an obscene picture her cell phone

Advertisment

சேலத்தில், பிளஸ்2 மாணவியின் அலைபேசிக்குத்தொடர்ந்து ஆபாசப் படங்கள், காணொளிகாட்சிகளை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வந்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சேலம் நகர பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அரசுப்பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார். இவருடைய அலைபேசிக்கு இளைஞர் ஒருவர் தொடர்ந்து ஆபாசப் படங்கள் மற்றும் ஆபாச காணொலி காட்சிகளையும் அனுப்பி பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி, தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றார்.

வீட்டில் மயங்கிக் கிடந்த மாணவியை மீட்ட பெற்றோர், சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின்பேரில், சேலம் நகர மகளிர் காவல்நிலைய காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.