
கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. 9,10,11,12 ஆம் வகுப்புகள் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது 12ஆம் வகுப்பு பொதுதேர்விற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மே 3 ஆம் தேதி மொழிப்பாடமும், மே 5 - ஆங்கிலம்; மே 7 - கணினி அறிவியல்; மே 11 - இயற்பியல், பொருளாதாரம்; மே 17 - கணிதம், விலங்கியல்; மே19 - வரலாறு, உயிரியல்; மே 21 - வேதியல், புவியியல் தேர்வுகள் நடைபெற இருப்பதாக அரசு தேர்வுகள் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில்தான் 12 ஆம் வகுப்புகள் செயல்பட ஆரம்பித்தது. மேலும், ஏப்ரல் இறுதியில் தமிழக சட்டமன்றத் தேர்தலும், மே 10 க்குப் பிறகு வாக்கு எண்ணிக்கையும் இருக்கும் என்ற தகவல்கள் நேற்று (16.02.2021) வெளியாகியிருந்த நிலையில் இன்று, தேர்தல் சமயத்திலேயே 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.