Advertisment

'+2 பொதுத்தேர்வு, பி.இ அரியர் குளறுபடி' - அமைச்சர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!

'12 Exam, B.E Exam' - MK Stalin's consultation with ministers !!

Advertisment

பி.இ அரியர் தேர்வு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பி.இ அரியர் தேர்வு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். அதேபோல் உயர் கல்வி, பள்ளிக் கல்வித்துறை, பல்கலைக்கழக துணைவேந்தர்களும்ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். பி.இ அரியர் தேர்வு முறையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு உள்ளிட்டவை குறித்து இந்த ஆலோசனையில் ஆலோசிக்கப்படுகிறது. அதேபோல் நீட் தேர்வு, செய்முறைத் தேர்வு, ஆன்லைன் வகுப்புகள் உள்ளிட்டவை குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

education meetings minister mk stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe