Skip to main content

உப்பனாற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

 

nn

 

புதுச்சத்திரம் அருகே உப்பனாற்றில் குளிக்கச் சென்ற 12 ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

புதுச்சத்திரம் அருகே கம்பளி மேடு கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் என்பவரின் மகன் சத்குரு. இவர் கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் புதன்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் மதியம் அப்பகுதியில் உள்ள 5 பேருடன் திருச்சோபுரம் உப்பனாற்றில் குளிக்கச் சென்றுள்ளார். குளித்துக் கொண்டிருக்கும் போது நீரில் மூழ்கி இறந்த நிலையில் அவருடன் சென்றவர்கள் மற்றும் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டுள்ளனர்.  

 

இது குறித்து புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரது உடல் கடலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஆற்றில் குளிக்கச் சென்று  நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !