Advertisment

12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம்

 12th class mark sheet available from today

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்தது. இதற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு எழுதிய 8.03 லட்சம் பேரில் 7.55 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி என 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவிகள் 96.38 சதவீதமும், மாணவர்கள் 91.45 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்தநிலையில் இன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் பட்டியல் விநியோகம் செய்யப்படுகிறது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மதிப்பெண் பட்டியல்பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு தரப்பட உள்ளது. மதிப்பெண் பட்டியலில் பள்ளி முத்திரை இட்டு வழங்கவும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

school TNGovernment exam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe