/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/159_16.jpg)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அரசு உதவி பெறும் பள்ளியின் விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமநாதன் என்பரின் மகள் தூத்துக்குடி மாவட்டம் சில்லாங்குளத்தில் உள்ள ஓர் அரசு உதவி பெறும் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுதியில் தங்கி இருந்த மாணவியின் உடல் இன்று அதிகாலை விடுதியில் உள்ள கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற பசுவந்தனை காவல் துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பள்ளிக்கு முன்பு மாணவியின் பெற்றோரும் அவரது உறவினர்களும் போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து அங்கு வந்த சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்து சமாதானம் செய்தார்.
Follow Us