Advertisment

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

12th class exam results release today

தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகவுள்ளது.

Advertisment

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 3,324 மையங்களில் நடந்த இந்த பொதுத்தேர்வை 8.17 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதனையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெற்றது. விடைத்தாள் திருத்தும் பணியில் மொத்தம்50,000 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள்ஈடுபட்டிருந்தனர். பின்னர் விடைத்தாள்திருத்தும் பணிமுடிந்தவுடன் மதிப்பெண் பதிவேற்றம் செய்யும் பணியும் நிறைவடைந்தது.

Advertisment

இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில்மகேஸ்காலை 9.30மணிக்குதேர்வு முடிவுகளை வெளியிடவுள்ளார். இதையடுத்து மாணவர்கள் பயின்ற பள்ளி மற்றும் இணைய தளங்கள்(www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in)வாயிலாக தேர்வு முடிவுகளைஅறிந்துகொள்ளலாம். மேலும், தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அவர்கள் பதிவு செய்து வைத்துள்ளகைப்பேசிஎண்ணுக்குதேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

students
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe