Skip to main content

ஓடாத ஜீப்பிற்கு 1.25 லட்சம் டீசல்: ஆட்டையப் போட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம்..!!

Published on 30/06/2018 | Edited on 30/06/2018

காயிலான் கடைச்சரக்காய் இருக்கும் பேருந்துகள் தவிர்த்து, சரி பாதிக்கு மேல் பணிமனைகளுடன் பேருந்துகளும் அடமானத்தில் இருந்து அரசுப் போக்குவரத்துக் கழகமே நஷ்டமான வேளையில் கூடுதலாய் ஓடாத ஜீப்பிற்கு ரூ.1.25 லட்சத்திற்கு டீசல் போட்டதாய் கணக்குக் காண்பித்து ஆட்டையப் போட்டுள்ளனர். பணிமனையிலுள்ள அதிமுக-வினர் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளிப்பட்டுள்ளது பரப்பரப்பை உண்டாக்கியுள்ளது.

 

1.25 lakh diesel for jeep running: State Transport Corporation



 
திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் தூத்துக்குடி ஆகிய மூன்று கிளைகளை உள்ளடக்கிய திருநெல்வேலி மண்டலத்தில் புளியங்குடி, சங்கரன்கோவில், கோவில்பட்டி, விளாத்திக்குளம், தூத்துக்குடி நகர், புறநகர், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், திசையன் விளை, வள்ளியூர், நெல்லை தாமிரபரணி, நெல்லை புறநகர், கே.டி.சி.நகர், சேரன்மகாதேவி கூனியூர், பாபநாசம், தென்காசி மற்றும் செங்கோட்டை என பல பணிமனைகள் உள்ளன.

 

 


இதில் புளியங்குடி பணிமனைக்கு சொந்தமான ஜீப் TMN 6903ல் தான் ஊழலே நடந்துள்ளது. இந்த புளியங்குடி பணிமனையில் நகர் மற்றும் புறநகரில் சுமார் 55 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், கிளை மேலாளர், பொறியாளர், அலுவலக ஊழியர்கள், டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் என 400க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பெரும்பாலும் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் வேலைக்குப் போகாமலே கட்சி வேலையை கவனித்து வருவதாக பணிக்கு வராமலே ஓ.பி.அடிப்பதும் உண்டு. பெரும்பாலும் பெரிய அளவில் பிரச்சனை ஏற்படாது இந்த விவகாரம். ஆனால் இந்த பணிமனைக்கு சொந்தமான TMN 6903 ஜீப் கடந்த டிசம்பரிலே காலாவதியான, பயன்பாட்டிற்கு உதவாத ஜீப் என முத்திரைக் குத்தப்பட்டு நெல்லை கே.டி.சி.நகரிலுள்ள பணிமனையில் கிடப்பில் போடப்பட்டிருக்க, அதற்கு டீசல் போடப்பட்டதாக ரூ.1.25 லட்சம் செலவானதாக ஆட்டையப் போட்டது தான் அதிமுக-வினரையும், கிளை அதிகாரிகளையும் கிறுக்குப் பிடிக்க வைத்துள்ளது.


 

1.25 lakh diesel for jeep running: State Transport Corporation



 
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் உண்மையை வெளிக்கொணர்ந்த வாசுதேவநல்லூரை சேர்ந்த அரசுப் போக்குவரத்துக் கழக டிரைவர் கணேசனிடம் பேசினோம்., "ஓடாத ஜீப்பிற்கு டிரைவராக புளியங்குடியை சேர்ந்த அதிமுகவை சேர்ந்த டிரைவர் ராஜ்மோகன் செயல்படுகின்றார் என டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் கையெழுத்திடும் டூட்டி சார்ட்டில் பார்த்தேன். டூட்டி சார்ட்டில் அவருடைய எண்ணான 7893ஐ குறிபிட்டு, அந்த ஜீப்பில் தான் டிரைவராக இருக்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

 


ஆளுங்கட்சிக்காரங்க இந்த மாதிரி இருப்பது வழக்கமான ஒன்று என்றாலும், அப்ப அந்த ஜீப்பின் நிலை என கண்டறிய ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்குள்ளான டூட்டி சார்ட்டை ஆர்.டி.ஏ. மூலம் கேட்டேன். புளியங்குடி கிளைக்குக் கேட்டதிற்கு பதில் சங்கரன்கோவில் கிளைக்கு பதில் தந்தார்கள். தொடர்ந்து விடாமல் கேட்க இப்பொழுது பதில் வந்துள்ளது. ஓடாத அந்த ஜீப்பிற்கு ரூ.1.25 லட்சம் டீசல் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுவே இப்படியென்றால் தமிழ்நாடு முழுவதும் எவ்வளவு கொள்ளையடித்திருப்பார்கள்..?" என நம்மை அதிர வைத்தார் அவர்.
 

ஊழலில் திளைத்துள்ள இந்தியாவிலேயே மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான தமிழக அரசுப் போக்குவரத்து கழகத்தினை மீட்பர் யார்..?


 

சார்ந்த செய்திகள்

Next Story

நெல்லை மக்களவைத் தொகுதி, விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Nellai Lok Sabha Constituency Announcement of Congress candidate for the by elections!

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுவையில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 8 வேட்பாளர்களின் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டனர். அதேசமயம் தமிழகத்தின் மயிலாடுதுறை மற்றும் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தன.

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஆறாவது பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 5 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ராஜஸ்தான் மாநிலத்திற்கு 4 வேட்பாளர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தின் திருநெல்வேலி மக்களவை தொகுதிக்கு ராபர்ட் புரூஸ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளார். மேலும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் தாரஹாய் குத்பர்ட்டின் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே அளித்துள்ளார். 

Next Story

தமிழக பா.ஜ.க வேட்பாளர்கள் அறிவிப்பு; உடனடியாக பட்டியலில் நிகழ்ந்த மாற்றம்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Tamil Nadu BJP Candidates Announcement; Immediate list change

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இதனையொட்டி தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகள் முடிவுற்றுள்ளன. ஒரு சில கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளன. மேலும் நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று (20.03.2024) முதல் தொடங்கி உள்ளது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதே சமயம் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. ஏற்கனவே வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 72 வேட்பாளர்கள் அடங்கிய 2 ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க கடந்த 13 ஆம் தேதி (13.03.2024) வெளியிட்டது.

அந்தவகையில் பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளரும், கட்சியின் தலைமையிடத்து பொறுப்பாளருமான அருண் சிங் 3 ஆம் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகளுக்கான பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டிருந்தார். அதன்படி சென்னை தெற்கு - முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம், கிருஷ்ணகிரி - சி. நரசிம்மன், நீலகிரி - எல்.முருகன், தூத்துக்குடி - நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி -  பொன். ராதாகிருஷ்ணன், வேலூர் - புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், பெரம்பலூர் - இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர்  ஆகியோர் தாமரைச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

Tamil Nadu BJP Candidates Announcement; Immediate list change

அதன்படி தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என்று பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் தொகுதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  த.மா.காவுக்கு தூத்துக்குடி தொகுதி ஒதுக்கப்பட இருப்பதால், திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.