Advertisment

நான்கு மணிநேரத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்ட கொள்ளையடித்த 12.5கிலோ நகைகள்!! (படங்கள்)

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ரோட்டில் வசிக்கும் தன்ராஜ் சொளத்ரி வீட்டில் புகுந்தவடமாநில கொள்ளையர்கள், தாய் மகனை கொலை செய்து விட்டு 12.5கிலோ நகைகள் மற்றும் ரூ. 6.75 லட்சம் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்து, தன்ராஜ்க்கு சொந்தமான காரில் தப்பிச் சென்றனர். அப்போது காரில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருப்பதைக் கண்ட கொள்ளையர்கள், காரை பட்டவிளாகம் கிராமத்தின் மெயின் ரோட்டில் நிறுத்திவிட்டு வயல்வெளியில் புகுந்து அங்குள்ள சவுக்குத் தோப்பில் நுழைந்துள்ளனர். இதைக் கண்ட கிராம மக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்தைச் சுற்றி வளைத்த போலீசார் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மனீஷ், ரமேஷ் பாட்டில், மஹிபால் ஆகிய மூவரையும் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

Advertisment

gold light thief
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe