துணை முதல்வர்ஒபிஎஸ் மாவட்டமான தேனி மாவட்டத்தில் குட்கா, பான்மசாலா போன்ற தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் பிடிபடுவது தொடர் கதையாக இருந்து வருகிறது.
தேனி மாவட்டத்தின் தலைநகரான தேனியில்இருக்கும் முக்கிய வர்த்தக வீதியான கடற்கரை நாடார் தெருவில் உள்ள ஒரு கடையில் குட்கா, பான்மசாலா போன்ற தடை செய்யப்பட்ட பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக உணவு பாதுகாப்பு நியமன அதிகாரிக்கு தகவல் கிடைத்ததின் பேரில் இன்று காலை அதிரடி சோதனை நடத்தினார்கள்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த சோதனையில் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள குட்கா, பான்மசலாப் பொருள்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக உணவுப்பாதுகாப்பு துறையின் மாவட்ட அதிகாரிசுகுணாவிடம் கேட்டபோது,
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தடை செய்யப்பட்ட குட்காப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து அதிரடி சோதனை நடத்தினோம். அதில், 125 கிலோ எடையுள்ள குட்கா, பான்மசாலா உட்பட ஐந்து வகையான போதைப்பொருள்கள் சிக்கின. இதன் மொத்த மதிப்பு ஒன்றரை லட்சம் ரூபாய். அந்த கடையின் உரிமையாளர் பூந்திராஜனை பிடித்துபோலீசாரிடம் ஒப்படைத்து இருக்கிறோம் அதன் அடிப்படையில்போலீசாரும் பூந்தி ராஜனை விசாரணைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். கைப்பற்றப்பட்ட பொருள்களை சோதனைக்காக அனுப்பியுள்ளோம். மேலும் நகரில் சில கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் விற்கப்பட்டு வருவதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது அதன் அடிப்படையில் தொடர்ந்து சோதனை செய்ய இருக்கிறோம் என்று கூறினார்.
ஆக உணவு பாதுகாப்பு நியமன பெண் அதிகாரியின் இந்த அதிரடி நடவடிக்கை வியாபாரிகள் மத்தியில் பெரும்பீதியை கிளப்பியிருக்கிறது.