Advertisment

தமிழக பட்ஜெட்டில் மீன்வளத்துறைக்கு 1,229.85 கோடி  ஒதுக்கீடு 

2020 மற்றும் 21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும்,தமிழக நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல்மீதான உரையைதொடங்கினார்.

காலை10 மணிக்கு தொடங்கியபட்ஜெட் மீதானநிதியமைச்சர் ஓபிஎஸ்ஸின் உரையில்,

Advertisment

நடப்பு நிதியாண்டில் தமிழகஅரசின் கடன் 4.56 லட்சம் கோடியாகஇருக்கும்எனதெரிவித்தஓபிஎஸ்,

நீரை சிக்கனமாக பயன்படுத்திதிருத்திய நெல் சாகுபடி முறைக்கு27.18 லட்சம் ஏக்கராகவிரிவுபடுத்தப்படும். தமிழக பட்ஜெட்டில் உணவு மானியத்திற்கு 6,500 கோடிரூபாய் ஒதுக்கீடு, 11.1 லட்சம் ஏக்கர் நெல் விதைப்பு முறை நாகை,திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கைக்கு விரிவுபடுத்தப்படும்.

1,229.85 crore allocated for Fisheries Department in Tamil Nadu budget

Advertisment

பொது விநியோகதிட்டத்தை செயல்படுத்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு 400 கோடிமானியம்.மின்சார துறைக்கு20,115 கோடி,கல்விதுறைக்கு 34,181 கோடியும், தொல்லியல்துறைக்கு 39.93கோடியும், கீழடியில் புதிய அகழ்வைப்பகம் அமைத்திட 12.21 கோடியும், பள்ளிக்கல்வித்துறைக்கு 34,181 கோடியும், உயர்கல்வி துறைக்கு5,052.84 கோடியும், மருத்துவதுறைக்கு 15,839 கோடியும்,பெண்கள் பாதுகாப்பானநிர்பயாதிட்டத்திற்கு தமிழக பட்ஜெட்டில் 71 கோடியும்ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல்தமிழக அரசு பெருந்துகளில்கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். காவல்துறைக்கு 8,876.57 கோடியும்,தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு405.68 கோடியும், 2020-21 ஆண்டில்சிறைத்துறைக்கு 329.74 கோடியும்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மத்திய சிறைச்சாலைகளில் மேலும் 6 பெட்ரோல்நிலையங்கள் அமைக்கப்படும். 5 புதிய மாவட்டங்களில் 550 கோடியில்பெருந்திட்ட வளாகம் அமைக்க இடம் கண்டறியும் பணி தொடங்கியுள்ளது.பேரிடர்மேலாண்மைக்கு 1,360 கோடிரூபாயும்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவாசித்தார்.

மேலும் வாடகை ஒப்பந்த முத்திரைத்தாள் வரியை1 சதவிகிதத்தில் இருந்து 0.25 சதவிகிதமாக குறைக்க அரசு முடிவுசெய்துள்ளது. ஒப்பந்தங்கள் தொடர்பான பதிவு கட்டணங்களுக்கு 1 சதவிகிதத்திலிருந்து 0.25 சதவிகிதம் குறைக்கப்படும். மீனாவர்களுக்காக மீன்பிடிதடைக்காலஉதவி,சேமிப்பு திட்ட சிறப்பு உதவித்தொகைக்காக 298.12 கோடியும், 4,997 மீன்பிடி விசைப்படகுகளில் 18 கோடியில்ட்ரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்படும்.தமிழக பட்ஜெட்டில் மீன்வளத்துறைக்கு 1,229.85 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விபத்துகளில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 4 லட்சம் நிதியும், விபத்துகளில் ஊனமுற்றோருக்கு 2 லட்சமும் நிதி அளிக்கப்படும்.சாலை பாதுகாப்பிற்கு 500 கோடிநிதி ஒதுக்கப்படும். நீதி நிர்வாகத்திற்கு 1,403.17 கோடிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் வெள்ளபாதிப்புகளை குறைக்க100 கோடிமானியம் நிதிக்குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆட்சேபனையில்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனைபட்டா வழங்கப்படும். தமிழ் வளர்ச்சித்துறைக்கு 74.08 கோடி நிதி ஒதுக்கப்ட்டுள்ளது.

அம்மா விபத்து ஆயுள் காப்பீடு திட்டத்துக்கு 250 கோடிரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எல்.ஐ.சியுடன் இணைந்து வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள் பயனடைய திட்டம் செய்யப்படுத்தப்படும், குடிமரமத்து பணிகளுக்கு 300 கோடிரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு 500 கோடிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுஎனவாசித்தார்.

budget Fishermen ops Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe