Advertisment

''120 ஆண்டுகால கனவு... 100 கோடி இதயங்களை வென்றுவிட்டார் நீரஜ் சோப்ரா...''-மு.க.ஸ்டாலின் வாழ்த்து 

OLYMPICS

டோக்கியோ ஒலிம்பிக்கில்ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று இந்திய வீரர் நீரஜ்சோப்ரா சாதனைப் படைத்துள்ளார். தொடர்ந்து ஈட்டி எறிதலில் முதல் இரண்டு சுற்றுகளில் அதிக தூரம் ஈட்டி எறிந்து தொடர்ந்து தங்கப் பதக்கத்தை நோக்கி முன்னிலையில் இருந்தநீரஜ் சோப்ரா, 6 சுற்றுகள் முடிவில் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். ஒலிம்பிக் தடகளப்போட்டியில்சுதந்திர இந்தியா முதல் முறையாக தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.நீரஜ்சோப்ரா தங்கம் வென்றுள்ளநிலையில், இந்தியா ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் 66வதுஇடத்தில் இருந்து 47ஆவதுஇடத்திற்கு முன்னோக்கி நகர்த்துள்ளது.

Advertisment

ஹரியானவை சேர்ந்த எளிய குடும்பத்தில் பிறந்தநீரஜ்சோப்ரா ராணுவத்தில் சுபேதாராகபணியாற்றி வருகிறார். தங்கம் வென்ற அவருக்கு பிரதமர் மோடி, இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இராணுவஅமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வாழ்த்துதெரிவித்துள்ளனர்.நீரஜ் சோப்ராவிற்கு6 கோடி ரூபாய் பரிசுத்தொகையுடன்கிரேடு -1 அரசுப்பணியும்வழங்கப்படும் என ஹரியானா அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

OLYMPICS

இந்நிலையில் ஒலிம்பிக் தடகளப்போட்டியில்முதல் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்ந்துள்ளநீரஜ் சோப்ராவிற்குதமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களைதெரிவித்துள்ளார். தடகளத்தில் 120 ஆண்டுகால இந்தியாவின் கனவை தனதுவெற்றி மூலம் நீரஜ்சோப்ரா நிறைவேற்றியுள்ளார். 100 கோடி இதயங்களை தனது வெற்றி மூலம் நீரஜ்சோப்ரா வென்று விட்டதாகவும்கூறியுள்ளார்.

TNGovernment stalin gold medal olympics
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe