
கடந்த 7ஆம் தேதி தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். அவருடனே முக்கிய அமைச்சர்கள் 33 பேரும் பதவியேற்றுக்கொண்டனர். தமிழகத்தில் புதிய அரசுபதவி ஏற்றதை தொடர்ந்து பல்வேறு புதிய வளர்ச்சி பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக 120 உழவர் சந்தைகள் திறக்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ''தோட்டக்கலை துறை சார்பில் தமிழகத்தில் 24 செம்மொழி பூங்காக்கள் உருவாக்கப்படும். தமிழகத்தில் புதிதாக 120 உழவர் சந்தைகள் திறக்கப்படும். செம்மொழி பூங்கா,உழவர்சந்தை போன்றவை முறையாக பராமரிக்கப்படவில்லை'' என தெரிவித்தார். அதேபோல் எட்டு வழி சாலைதிட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவை அனுமதிக்கப்படமாட்டாது எனவும் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)