Advertisment

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 120 கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு! 

120 Grama member swaiting at Tirupati District Collector office

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம், மட்றப்பள்ளி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக சரண்யா என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா கிராம நிர்வாக அலுவலகத்தில் திடீரென ஆய்வு செய்த போது கிராம கணக்கு புத்தகம் பராமரிக்காமல் இருந்துள்ளது. அ. பதிவேடு, பட்டா, சிட்டா புத்தகங்கள் போன்றவையும் சரியாக பராமரிக்கவில்லையாம். இதுக்குறித்து கேள்வி எழுப்பியபோது சரியாக பதிலளிக்கவில்லையாம். இதனால் கிராம நிர்வாக அலுவலரான சரண்யாவை பணியிட நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது தவறானது எனச் சொல்லியும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட சரண்யாவிற்கு மீண்டும் பணி வழங்கக்கோரி திருப்பத்தூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் 120க்கும் மேற்பட்டோர் ஏப்ரல் 23ஆம் தேதி மதியம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்துள்ளனர். அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் இல்லாத காரணத்தால் கடந்த 3 மணி நேரமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருக்கின்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

TIRUPATTUR
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe