
பாஜக பிரமுகரும் நடிகையுமான மதுவந்தி கடன் பாக்கியை தராததால் அவரது வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்ததாகதகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின்மகளும் நடிகையுமான மதுவந்திக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் ஒரு வீடு உள்ள நிலையில், அந்த வீட்டை வாங்குவதற்காக கடந்த 2016ஆம் ஆண்டு இந்துஜா ஃபைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம்அவர் கடன் பெற்றிருந்ததாககூறப்படுகிறது. இந்நிலையில், வீனஸ் காலனியில்வாங்கப்பட்ட அந்த வீட்டிற்காகவாங்கிய கடனில் 1.26 கோடி ரூபாயைமதுவந்தி திருப்பிசெலுத்தவில்லை எனகூறப்படுகிற நிலையில், இது தொடர்பாக நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்ற அந்த நிதி நிறுவனத்தினர் மதுவந்தியின் வீட்டிற்கு அதிகாரிகளுடன் வந்து சீல் வைத்தனர்.
Follow Us