12 year old girl issue Youth under POCSO

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள சாணார்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் பிருந்தா (வயது 12) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி, பள்ளி முடிந்து சிறுமி வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுமியைவழிமறித்த இளைஞர் ஒருவர், சிறுமிக்குபாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரிடமிருந்து தப்பிய சிறுமி, நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார்.

Advertisment

இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நங்கவள்ளி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில், இடைப்பாடி அருகே உள்ள பக்கநாடு கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் மகன் செல்வராஜ் (வயது 24) என்ற இளைஞர்தான் சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து செல்வராஜை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.

Advertisment