Advertisment

பிளஸ் டூ மாணவர் தற்கொலை; கேம் விளையாட்டால் விபரீதமா? - பெற்றோர் வேதனை!

12 th student  lost their life near Chidambaram

Advertisment

சிதம்பரம் அருகே ஆணையங்குப்பத்தை கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் மகன் சந்திரயோகேஷ். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சிபிஎஸ்இ பாடத்தில் 11- ஆம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு செல்கிறார். இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து 11-ஆம் தேதியிலிருந்து பள்ளிக்கு செல்ல இருந்த நிலையில் 10 ஆம் தேதி இரவு நல்ல முறையில் பெற்றோர்களிடம் பேசிவிட்டு சந்திரயோகேஷ் தனது அறைக்கு தூங்கச் சென்றுள்ளார்.

இந்நிலையில் காலையில் கழுத்தில் பாலித்தீன் பையால் தலையை மூடி டேப் போட்டு ஒட்டி விஷத்தன்மை கொண்ட வாயுவை செலுத்தி தற்கொலை செய்து கொண்டு இறந்து கிடந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பரங்கிப்பேட்டை காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து அவரது பெற்றோர், “10 ஆம் தேதி பகல் நேரத்தில் அதிக தொலைப்பேசி அழைப்பு வந்த வண்ணம் இருந்தன. ஆனால் அதனை சந்திரயோகேஷ் எடுக்காமல் துண்டித்துக்கொண்டே இருந்தான்.யார் தொடர்ந்து போன் செய்து கொண்டிருக்கிறார்கள் எடுத்துப் பேசு எனக்கூறினோம். அதற்கு ஏதோ சொல்லி சமாளித்தான். பின்னர் இரவு நல்ல முறையில் தான் தூங்கச் சென்றதாகவும் காலையில் பிணமாக பார்க்கிறோம். மேலும் அவன் மாணவர் பயன்படுத்திய தொலைப்பேசியில் ஆராய்ந்து பார்த்தபோது அனைத்து தகவல்களும் அழிக்கப்பட்டிருந்தது. எனவே மாணவர் ஆன்லைன் கேம் விளையாட்டில் அடிமை ஆகி அவர்கள் கூறும் கட்டளைக்கு ஏற்ப தற்கொலை செய்து கொண்டாரா? என அவரது தொலைப்பேசி மற்றும் மடிக்கணினி உள்ளிட்டவர்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று வேறு யாருக்கும் நடக்கக்கூடாது என்று பெற்றோர்கள் கூறுகின்றனர்.

school student Chidambaram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe