nn

தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினரால் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து தொடர்கதையாகி வருகிறது. நேற்று முன்தினம்அதிர்ச்சி தரும் விதமாக 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்றும் தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

Advertisment

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்களிடமிருந்து விசைப்படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

தமிழக மீனவர்கள் கைதுக்கு தொடர்ச்சியாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், நேற்று தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக இன்றும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.