
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அண்மையில் நாகை மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து கடந்த 28 ஆம் தேதி மீண்டும் ஆறு தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்படையின் இந்த தொடர் கைது நடவடிக்கைகளுக்கு தமிழக மீனவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தற்பொழுது இன்று (6/9/2022) மேலும் 12 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்து செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு அருகே விசைப்படகில் மீன்பிடித்து வந்த தமிழக மீனவர்களை எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கடற்படை கைது செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)