ADVERTISEMENT

பொங்கலில் கிடந்தது என்ன?;12 மாணவர்கள் வாந்தி, மயக்கம்; போலீசார் விசாரணை

05:29 PM Jan 10, 2024 | kalaimohan

கள்ளக்குறிச்சியில் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ளது அவரியூர். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 96 மாணவர்கள் மொத்தமாக பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலையில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

பொங்கல் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது மாணவர்கள் சிலர் வாந்தி எடுத்துள்ளனர். உடனடியாக இது குறித்து தகவலறிந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உணவு சமைத்தவர்கள் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட பொங்கலை ஆய்வு செய்தனர். அதில் இறந்த நிலையில் பல்லி ஒன்று கிடந்தது. உடனடியாக 12 மாணவர்களும் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள வானாபுரம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சமையல் செய்தவர்களும் அதே உணவை சாப்பிட்டதால் அவர்களுக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பகண்டை கூட்டு ரோடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT