மன்னார் வளைகுடா பகுதியில் நுழைந்த 12 பேர் கைது..!

இந்திய கடலோர காவல் படை மற்றும் கடலோர போலீஸ் குழுமம் சார்பில் சாகர் கவாச் என்ற ரோந்து பயிற்சி சென்னை முதல் கன்னியாகுமரி வரை 12 கடலோர பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இராமேஸ்வரம் முதல் மண்டபம் பகுதி வரை உள்ள மன்னார் வளைகுடா இன்று காலை துவங்கப்பட்ட இந்த ஆப்ரேஷனில் பாம்பன் கடல் பகுதியில் இருந்து இரண்டு நாட்டிகல் தூரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த போது கடல்பகுதியில் அத்துமீறி ஊடுருவிய பனிரெண்டு பேரை கைது செய்து தற்போது மண்டபம் மெரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

இவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் எனவும், இவர்களின் இலக்கு மதுரை மீனாட்சியம்மன் கோவில், ராமேஸ்வரம் ராமசுவாமி கோவில், வழுதூர் அனல் மின்நிலையம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதால் சம்பந்தப்பட்ட இலக்குகளில் காவல்துறை பாதுகாப்பினைப் பலப்படுத்தியுள்ளதாக தகவல்.

arrest
இதையும் படியுங்கள்
Subscribe