நகராட்சி ஆணையர்கள் 12 பேருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!

12 municipal commissioners transferred with promotion!

தமிழகத்தில் தேர்வு நிலை அந்தஸ்தில் பணியாற்றி வந்த 12 நகராட்சி ஆணையர்கள் சிறப்பு நிலை பதவி உயர்வுடன், இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

அதன்படி, வால்பாறை நகராட்சியில் பணியாற்றி வந்த பாலு, கோவையில் உள்ள தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவன துணை இயக்குநராகவும், பட்டுக்கோட்டையில் இருந்த சவுந்தரராஜன் மறைமலைநகர் நகராட்சிக்கும், பழனி நகராட்சி ஆணையர் கமலா கோவில்பட்டிக்கும்; ராணிப்பேட்டையில் இருந்த ஏகாராஜ் உதகமண்டலம் நகராட்சிக்கும், திண்டிவனம் நகராட்சியில் இருந்த தட்சிணாமூர்த்தி திருவண்ணாமலைக்கும், நாகையில் இருந்த ஸ்ரீதேவி பொள்ளாட்சிக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.

மன்னார்குடியில் இருந்த சென்னகிருஷ்ணன், நாமக்கல் நகராட்சி ஆணையராகவும், தேனி அல்லிநகரம் ஆணையர் வீரமுத்துக்குமார் காரைக்குடிக்கும், சிதம்பரத்தில் இருந்த அஜிதா பர்வீன் ராமநாதபுரம் நகராட்சிக்கும்; உடுமலைப்பேட்டையில் இருந்த சத்தியநாதன், கொடைக்கானல் நகராட்சிக்கும், ஆத்தூர் நகராட்சியில் இருந்த வசந்தி, கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையராகவும், மேட்டூர் நகராட்சி ஆணையர் புவனேஸ்வரன் என்கிற அண்ணாமலை தர்மபுரி நகராட்சிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை தமிழ்நாடு நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் பொன்னையா பிறப்பித்துள்ளார்.

Corporation transfer
இதையும் படியுங்கள்
Subscribe