Advertisment

'12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - பதவி உயர்வு!'

12 ips officers transferred tn govt order

தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisment

அதன்படி, 12 ஐ.பி.எஸ். அதிகாரிகளில் 3 பேருக்கு கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வும், 9 பேருக்குப் பணியிட மாற்றமும் அளிக்கப்பட்டுள்ளது.தமிழக தீயணைப்புத்துறை டி.ஜி.பி.யாக கரண் சின்ஹா, தமிழக காவலர் வீட்டு வசதி வாரிய தலைவராக ஏ.கே.விஸ்வநாதன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக வன்னிய பெருமாள், திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக வருண்குமார், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக ஆபாஷ்குமார், சீருடைப் பணியாளர் தேர்வாணைய ஏ.டி.ஜி.பி.யாக சீமா அகர்வால், காவல்துறை நலப்பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக சைலேஷ்குமார் யாதவ் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

ஐ.ஜி.அமல்ராஜ் பதவி உயர்வுபெற்று ஆபரேஷன்ஸ் (கமாண்டோ படை) பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் ஐ.ஜி.சங்கர் ஏ.டி.ஜி.பி.யாக பதவி உயர்வுபெற்று தமிழக காவல்துறை தலைமையக ஏ.டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

transferred IPS OFFICERS tn govt
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe