IAS Officers Transfer

தமிழகத்தில் அண்மையாகவே ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் நிர்வாககாரணங்களுக்காகபணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் 12ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisment

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜாராமன் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாற்றுத்திறனாளி நலத்துறை செயலாளராக ஐ.ஏ.எஸ் அதிகாரி சிஜிதாமஸ் வைத்தியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். குமார் ஜெயந்த் ஐ.ஏ.எஸ் தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி இயக்குநராக ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆனந்த் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொழில்துறை ஆணையராக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையராக ஐ.ஏ.எஸ் அதிகாரி பூஜா குல்கர்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சுகாதாரத்துறை சிறப்புச் செயலாளராக கலையரசி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக வேங்கடபிரியா மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சிறு தொழில் மேம்பாட்டு நிறுவன கூடுதல் தலைமைச் செயலாளராக விக்ரம் கபூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சி மேம்பாட்டு முகமை திட்ட அலுவலராக மோனிகா ராணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநராக சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment