/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/adfadf.jpg)
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியகுளம் என்ற பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் தோட்டம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இவர் இன்று காலை தனது தோட்டத்திற்கு நீர் பாய்ச்ச சென்றபோது அவரது தோட்டத்தை சுற்றியுள்ள கம்பி வலை எனப்படும் பென்சிங் வலை அருகே ஒரு மலைப்பாம்பு பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பிறகு உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் வனத்துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு கம்பி வலைக்குள் பதுங்கியிருந்த சுமார் 12 அடி நீளமும் 30 கிலோ எடையும் கொண்ட அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பிறகு அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு போய் அந்த பாம்பை விட்டனர். இந்த சம்பவம் அருகே உள்ளவர்களையும், அப்பகுதி மக்களையும் மெய்சிலிர்க்க வைத்தது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)