12 feet long crocodile caught in a pond near Chidambaram

சிதம்பரம் அருகே சிவாயம் கிராமத்தில் உள்ள குளத்தில் முதலை ஒன்று இருப்பதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சிதம்பரம் வனவர் அஜிதா தலைமையிலான வனத்துறையினர், சம்பந்தப்பட்ட கிராமத்தில் உள்ள குளத்தில்முதலையை வலைவீசி பிடித்தனர். இதனைத்தொடர்ந்து, முதலையை சிதம்பரம் அருகே உள்ள ஏரியில்விட்டனர். முதலையின் நீளம் 12 அடி 400 கிலோ என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலையைப் பிடித்ததால் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.