Advertisment

12 கோடி பேர் டிக் டாக்கில் லைக்கிற்கு வெயிட்டிங்...!! டிக் டாக் தற்கொலையில் தமிழகம் முன்னிலை...!!

இந்தியாவில் டிக் டாக்செயலியில் தங்கள் நடிப்பு திறமையை வீடியோவாக பதிவிட்டு லைக்கிற்காககாத்திருப்போர் எண்ணிக்கை12 கோடி பேர் என்று டிக் டாக்அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வீடியோ வெளியிடுபவர்கள்தற்கொலை எண்ணத்தை தவிர்க்க இனி டிக் டாக்கிற்கு அடிமையானவர்களுக்கு அந்த நிறுவனமேகவுன்சிலிங் அளிக்கவும்உள்ளது.

Advertisment

tik tak

டிக் டாக் செயலியில் வீடியோ வெளியிட்டு தங்கள் திறமைகளை காட்டி வந்த சிலர் தற்போது டிக் டாக்கில்கிடைக்கும் லைக்கிற்காகஏங்கி முழு நேர அடிமைகளாக மாறிவிட்டனர். இந்தியாவில் டிக் டாக்,ஹலோ,விகோபோன்ற வீடியோ செயலிகளை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு பொழுதுபோக்கு விரும்பிகளை தொடர்ந்து ஆட வைத்துக் கொண்டிருப்பது பைட் டான்ஸ் என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம்.

இந்தியாவில் மும்பை மற்றும் டெல்லியில் அலுவலகங்களை கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்திற்கு உலக அளவில் 50 அலுவலகங்கள்உள்ளன. இந்தியாவில் மட்டும் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஒடியா, ஹிந்தி உட்பட 11 மொழிகளிலும்,சர்வதேச அளவில் 150 மொழிகளிலும் செயலிகளை இயக்குகிறது.

Advertisment

tik tak

இந்த நிறுவனம் இந்தியாவில் பட்டிதொட்டிகளிலும், நவநாகரீகமான நகரங்களிலும், பெண்கள், ஆண்கள், குழந்தைகள் எனடிக் டாக்கில்செய்கின்ற சேட்டைகளை பார்த்து, ரசித்து அதனை பதிவு செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்காகவே 500 பேர் கொண்ட பணியாளர்கள் குழு 24 மணி நேரமும் பணியில் உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் டிக் டாக்கில்ஆபாசம் மற்றும் வன்முறையை தூண்டும் 60 லட்சம் வீடியோக்களை பணியாளர்கள் அழித்துள்ளதாக பைட் டான்ஸ்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

tik tak

12 கோடி பேர் தங்களது வீடியோக்களை டிக் டாக்கில்பதிவு செய்துள்ளதாகவும், ஹலோ செயலியில் நான்கு கோடிப் பேரும், வீகொசெயலியில் 2 கோடி பேரும் தங்களது திறமைகளை காட்டி வீடியோக்களை பதிவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அண்மைக்காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள டிக் டாக் செயலியைபாதுகாப்பானதாக மாற்ற 13 விதிகளுடன் செயல்பாட்டை மேம்படுத்த உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி 13 வயதிற்கு உட்பட்டோர் டிக் டாக்பயன்படுத்தாமல் இருக்கவும், ஒருவர் அதிகபட்சம் எத்தனை நிமிடங்கள் அதனை பயன்படுத்த வேண்டும் என நேர கட்டுப்பாடும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும்முகநூல் போல கடவு சொல்பயன்படுத்தும் முறை செயல்பாட்டில் உள்ளது. இதில் உள்ள வீடியோக்கள் அனைத்தும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.ஆபாச வீடியோக்கள் உடனடியாக நீக்க அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த13 விதிகள் அடங்கிய உத்தரவாதம் கொடுத்த பின்னரே இந்தியாவில் டிக் டாக்குக்குவிதிக்கப்பட்ட தடை விலகல் ஆனது எனவும் பைட் டான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

tik tak

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் தான் டிக் டாக்கைமுன்வைத்து தற்கொலை சம்பவங்கள் மற்றும் சாதிய மோதல்கள், ஆபாச பேச்சுக்கள், கலாச்சார சீரழிவு போன்ற சர்ச்சைகள் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக புகார் அளிக்க தனி தொலைபேசி எண்ணையும், கண்காணிப்பு அதிகாரி ஒருவரையும் பணியமர்த்தி உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்கொலை செய்யும் எண்ணத்தில் இனி யாராவது வீடியோவை பதிவிட்டால் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டு கவுன்சிலிங் அளிக்கும் திட்டம்திங்கட்கிழமை முதல் செயல்பாட்டிற்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தநிலையிலும்இந்தியாவில் டிக் டாக்கிற்கு தடைவந்துவிட கூடாது என இவ்வளவு சிரத்தை எடுக்க காரணம் இந்தசெயலி மூலம் இந்தியாவில் விளம்பர வருவாயாக மட்டும் பல நூறு கோடிகளை குவிப்பதால்தான்பைட் டான்ஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இந்தியாவில் டிக் டாக்செயலிக்குதடை விதிக்கும் அளவிற்கு நடந்து கொள்ளக்கூடாது எனபல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இருப்பினும்இந்தியாவில்பதிவிடும் வீடியோக்கள் டிக் டாக்செயலியை மீண்டும் தெருவிற்கு இழுத்து வந்து விடும் என்றேதோன்றுகிறது.

Suicide tik tok video
இதையும் படியுங்கள்
Subscribe