11th student lost their life in grief

விருத்தாசலம் அடுத்த வி.குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் மகன் ஹரிஷ்(16). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி பிளஸ் 1 பொது தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் பாஸ் ஆகாததால், மன வேதனையடைந்த மாணவன், ஹரிஷ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக கடலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, கடந்த 9 நாட்களாக, அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

Advertisment

இந்நிலையில் வியாழக்கிழமை(23.5.2024) மாலை சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், மகனின் இறப்பிற்கு காரணம், மருத்துவர்கள் சரியான முறையில் சிகிச்சை அளிக்காததே காரணம் எனக் கூறிமருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

தகவல் அறிந்த அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் கல்பானா, சப் இன்ஸ்பெக்டர்கள் லெனின், பரணிதரன் ஆகியோர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அனைவரையும் கலைந்து போக செய்தனர். இதனால் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.