/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/krish44.jpg)
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள சூதாளம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவருடைய மகள் சந்தனாஸ்ரீ (வயது 17).இவர், தேன்கனிக்கோட்டையில் உள்ள அரசுப்பள்ளியில் பிளஸ்1 படித்துவிட்டு, தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். அவர் கலைப்பிரிவில் படித்து வந்தார். இந்நிலையில், ஜூன் 27- ஆம் தேதி பிளஸ்1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வில் அவர் தோல்வி அடைந்திருப்பது தெரிய வந்தது.
இதனால் மனம் உடைந்த சந்தனாஸ்ரீ, யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்தார். தற்கொலை முடிவெடுத்த அவர், திடீரென்று வீட்டின் தனி அறைக்குள் சென்று மின் விசிறி மாட்டும் கொக்கியில் நைலான் கயிற்றில் தூக்கிட்டு தொங்கினார். அவரை மீட்ட பெற்றோர், உடனடியாக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்களின் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது. இதுகுறித்து கெலமங்கலம் காவல்நிலைய காவல்துறையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)