ஐ.டி ஊழியர் லாவண்யாவைத் தாக்கி வழிப்பறி செய்த வழக்கில் கைதான கொள்ளையன் உள்பட 11 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

Advertisment

கடந்த மாதம் 13-ம் தேதி ஐ.டி. ஊழியர் லாவண்யாவை 3 கொள்ளையர்கள் கொடூரமாகத் தாக்கி வழிப்பறி செய்ததாக விநாயகமூர்த்தி, நாராயணமூர்த்தி, லோகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்தகொடூர சம்பவத்தில் தொடர்புடைய விநாயகமூர்த்தியை குண்டர்தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் வைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

இதேபோல், கடந்த மாதம் குமரன் நகர் காவல் எல்லையில் கேபிள் டிவி ஆப்பரேட்டர் கந்தன் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடிகளான படப்பை பாஸ்கர், காலா வினோத், சுரேஷ், சோத்துப்பானை என்கிற மணிகண்டன், சரவணன், நேதாஜி ஆகிய 6 பேர் உட்பட மொத்தம் 11 பேரையும், குண்டர்தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் வைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.