Advertisment

அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 118 வழக்குகள் பதிவு 

118 cases of bursting of  crackers beyond permitted time have been registered

தமிழக அரசு கொடுத்திருந்த நேரக் கெடுவை மீறி பட்டாசு வெடித்ததால் 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் பாரம்பரிய வழிபாடு மற்றும் கலாச்சார முறைகளில் தீபாவளி கொண்டாட்டம் களைக்கட்டுகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தமிழகத்தின் பல இடங்களில் மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். மேலும் மக்கள் காலையிலேயே வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருகின்றனர்.

Advertisment

இதனிடையே காற்று மாசுபாடு காரணமாக உச்சநீதிமன்றம் கூறியுள்ள நேரப்படி தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றுஅறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் இதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காகச் சென்னை மாநகரக் காவல் ஆணையம் தனிப்படையையும் அமைத்தது. இந்த நிலையில், சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக இதுவரை 118 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று இரவு முதல் மக்கள் பட்டாசுகளை வெடித்து வருவதால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது.

case police diwali Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe