117 female candidates, 117 male candidates - 'Naam Tamilar' Seaman to be announced on the same platform!

Advertisment

தமிழகத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பிரச்சாரம்,கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனதீவிரம் காட்டி வருகின்றன. தேர்தல் தேதிகள் தாமதமாக அறிவிக்கப்படும் என அரசியல் கட்சிகள் நினைத்திருந்த நிலையில், தேர்தல் தேதி முன்னதாகவே அறிவிக்கப்பட்டதால்கூட்டணி, தொகுதிப் பங்கீடு, பிரச்சாரம்,வேட்பாளர் பட்டியல், வேட்புமனுத்தாக்கல் போன்ற விஷயங்களில் அரசியல் கட்சிகள் மும்மரமாக இயங்கி வருகின்றன.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 234 வேட்பாளர்களையும் மார்ச் 7 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் பரப்புரை கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தவுள்ளார். 117 தொகுதியில் பெண்கள், 117 தொகுதியில் ஆண்கள் என மொத்தம் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிவிக்கப்படுவதோடுநாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டு வரைவு ஆவணமும் பொதுக்கூட்டத்தில் வெளியப்படும் எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.