Skip to main content

பேராசிரியர் அன்பழகன் விருதுக்கு 114 அரசு பள்ளிகள் தேர்வு - பட்டியல் வெளியீடு

Published on 01/12/2022 | Edited on 01/12/2022

 

114 Govt schools selected for Prof. Anbazhagan Award- list published

 

பேராசிரியர் அன்பழகன் பெயரில் தமிழகத்தில் சிறந்த பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

 

அதில், பேராசிரியர் அன்பழகன் அவர்களது நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் D.P.I. வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் திருவுருவச்சிலை நிறுவப்படுவதுடன் அவ்வளாகம் "பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்” என்றும் அழைக்கப்படும். மேலும் கற்றல் கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி பன்முக வளர்ச்சி என வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்குப் பேராசிரியர் பெயரில் விருது வழங்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இதைத் தொடர்ந்து, 2020-21 ஆம் கல்வி ஆண்டில் சிறந்த அரசு பள்ளிகளுக்கான பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. ஒரு மாவட்டத்திற்கும் மூன்று பள்ளிகள் வீதம் மொத்தமாக 114 அரசு பள்ளிகள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு அதற்கான பட்டியல் வெளியாகியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்