1,112 Corona in Raiapuram

தமிழகத்தில் மொத்தம் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,585 ஆக அதிகரித்துள்ளது. நேற்று சென்னையில் மேலும் 332 பேருக்குகரோனாஇருப்பதுஉறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில்கரோனாவால் பாதிக்கப்பட்டோர்எண்ணிக்கையானது 6278 ஆக உயர்ந்துள்ளது.

Advertisment

இந்நிலையில் ராயபுரத்தில் 1,112 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,047-லிருந்து1,112 ஆக உயர்ந்துள்ளது.அடுத்தபடியாக கோடம்பாக்கத்தில் 990 பேருக்கும், திருவிக நகரில் 750 பேருக்கும் கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Advertisment

இதனால் ராயபுரம், கோடம்பாக்கம், திருவிக நகர் ஆகியவை தொடர்ந்து கருஞ்சிவப்பு மண்டலமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கருரூரில்இன்று 16 பேருக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் 16 பேரும் மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.