110 shaving gold jewelery stolen from house in broad daylight!

Advertisment

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகேயுள்ள புதுக்கூரைப்பேட்டை மாரியம்மன் கோவில் அருகில் வசித்து வருபவர் தனலட்சுமி. இவர் வழக்கம்போல், காலை 7 மணிக்குதன்னுடைய சொந்த நிலமான முந்திரி வயலுக்கு, பணியாட்களை வைத்து பணிபுரியச் சென்றுள்ளார்.

இந்தநிலையில், முந்திரி வயலில் இருந்துதனலட்சுமி மற்றும் அவரது மகன் விக்னேஷ் உள்ளிட்டோர் மதியம் வீட்டிற்கு வந்தபோது முன்பக்க கதவின்பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து அதில் இருந்த 110 பவுன் தங்க நகைகள் மற்றும் 2 லட்சத்து 2 ஆயிரம் பணத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாகவிருத்தாச்சலம் போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அதன் பேரில் அங்கு சென்ற விருதாச்சலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

தனலட்சுமிக்கு மூன்று மகள்கள் உள்ளதாகவும், இரண்டு மகள்கள் திருமணம் செய்து கொடுத்த நிலையில், தற்போது இளைய மகளுக்குத் திருமணம் செய்ய நகைகள் வாங்கி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வீட்டில் உள்ளவர்கள் சொந்தநிலத்திற்குவேலைக்கு சென்றிருந்த நேரம் பார்த்து, பட்டப்பகலில் மர்ம நபர்கள் வீட்டுக்குள் சென்று நகை மற்றும் பணத்தைத் திருடிச்சென்ற சம்பவம் அக்கிராம மக்கள் இடையேஅச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.