Advertisment

11ஆண்டுகள் தலைமறைவு... சுப நிகழ்ச்சியில் கைதான குற்றவாளி!

11 years in hiding ... Convict arrested on auspicious occasion

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காவல் நிலையப் பகுதியில் உள்ளது மூரார்பாளையம். இந்த கிராமத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு சிவமலை என்ற பெண்ணை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளிசின்ன சேலத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் சின்னத்துரை(46). குற்றவாளியான இவர்போலீசிடம் சிக்காமல் கடந்த 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்துள்ளார். அவரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

சின்னதுரை மூரார்பாளையம் கிராமத்தில் உள்ள அவரது உறவினரின் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவந்துள்ளார். இதனை ரகசிய தகவல் மூலம் அறிந்த சங்கராபுரம் போலீசார் அங்கு விரைந்து சென்று சின்னத்துரையை மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர். இவர் மீது சங்கராபுரம் சின்னசேலம் உட்பட சில காவல் நிலையங்களில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் போடப்பட்டு அவை நிலுவையில் உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தகொலைகுற்றவாளி தற்போது கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

arrested criminal kallakurichi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe