Advertisment

11 வயது சிறுமியை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை; பட்டுக்கோட்டையில் கொடூரம்

11-year-old girl confined at home; Atrocity in pattukottai

Advertisment

தஞ்சாவூரில் 11 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்த நிலையில், இரண்டு இளைஞர்கள் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 11 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்ததைப் பயன்படுத்தி அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பாரதி, மதியழகன் என்ற இரண்டு இளைஞர்களை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக புகாரளித்தும் முறையாக விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. அதனடிப்படையில் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமைக் காவலர் சரளாஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து நடத்தப்பட்டவிசாரணையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைதொடர்ந்து வருகின்றனர். பட்டுக்கோட்டையில் 11 வயது சிறுமி அடைத்து வைக்கப்பட்டுபாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

police Thanjai pattukottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe