Skip to main content

சென்னையில் 11 சுரங்கப்பாதைகள் மூடல்!

Published on 11/11/2021 | Edited on 11/11/2021

 

;'

 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துவருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்துவருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. கனமழை காரணமாக சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. மேலும், சென்னையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சுரங்கப்பாதைகள் மூழ்கியுள்ளன. இந்நிலையில், கனமழையாலும், தண்ணீர் தேங்கியுள்ளாதாலும் சென்னையில் 11 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி, வியாசர்பாடி, கணேஷபுரம், அஜாக்ஸ், கெங்கு ரெட்டி, மேட்லி, துரைசாமி, பழவந்தாங்கல், தாம்பரம், அரங்கநாதன், வில்லிவாக்கம், காக்கன் ஆகிய பகுதிகளில் உள்ள சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.

 

kl

 

சார்ந்த செய்திகள்