கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் 190 நாடுகளின் இயல்பு நிலையை பாதித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,கரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
அதேபோல் தமிழக அரசு அறிவித்திருந்த 144 தடை உத்தரவு ஏப்ரல்15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக 144 தடை தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும்நிலையில்144 தடை உத்தரவை மீறி வெளியே சென்றோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது ,வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மற்றும் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்பொழுது 5 நாட்களில் எத்தனை வழக்குகள், எத்தனை வாகனங்கள், எத்தனை கைதுகள் நடைபெற்றுள்ளது என்பது தொடர்பான தகவல்களை காவல்துறைவெளியிடப்பட்டுள்ளது. அதன்படிகடந்த 5 நாட்களில்11,565 வாகனங்கள் தடையை மீறி வெளியே வந்ததற்காக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, 14,815 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, 17,668 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.