
தமிழகத்தில் இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் கரோனாபரவல் என்பது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று மேலும் 11,681 பேருக்குகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று சென்னையில் ஒரே நாளில்3,750 பேருக்குகரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் கரோனாசிகிச்சையில் உள்ளவர்களின்எண்ணிக்கை 84,361 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் 7,071 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பினோர் எண்ணிக்கை 9,27,440 ஆக அதிகரித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி தமிழகத்தில் 53 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 21 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 32பேரும்கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாஉயிரிழப்பு மொத்த எண்ணிக்கை என்பது 13,258 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் செங்கல்பட்டில் 947 பேருக்குகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 715 பேருக்கும், திருவள்ளூரில் 529 பேருக்கும், மதுரையில் 462பேருக்கும், சேலத்தில் 401 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)