11 tahsildar transferred in Kallakurichi

கள்ளக்குறிச்சி மாவட்டம்கருணாபுரம்பகுதியில்விஷச்சாராயம்குடித்து இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் சிலர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள சாராய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதே சமயம் இது தொடர்பான வழக்குகளைசிபிசிஐடிபோலீசார்விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் 11 வட்டாட்சியர்களை பணியிடை மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார்.சின்னசேலம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட வட்டாட்சியர்களை மாற்றி உத்தரவிட்டுள்ளார். கள்ளச்சாராய விவகாரத்தில் முதல்வர் ஏற்கனவே இருந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் இருவரையும்பணியிடைமாற்றம் செய்த நிலையில் தற்போது புதிய ஆட்சியர் 11வட்டாட்சியர்களைமாற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment