/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/998_139.jpg)
சட்ட விரோத மது விற்பனையைத் தடுக்க ஈரோடு மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில், வரப்பாளையம், ஈரோடு தாலுகா, சூரம்பட்டி, வீரப்பன் சத்திரம், கடத்தூர், பர்கூர் மற்றும் ஈரோடு டவுன் போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அரசு மதுபானத்தை சட்டவிரோதமாக கடத்தி, அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த நம்பியூர் தாலுகா, பொலவபாளையம், தண்டுக்காரன் தோட்டத்தைச் சேர்ந்த நடராஜ் (50), ஈரோடு, மூலப்பாளையம், பாரதி நகரைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (23), புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி, கங்கானிபட்டியைச் சேர்ந்த சின்னையன் (48), தஞ்சாவூர் மாவட்டம், திருவாரன்குறிச்சி, வடபாதி கள்ளிக்காடு பகுதியைச் சேர்ந்த ரங்கராஜ் (50), ஈரோடு பெரியசேமூர், சின்னவலசு பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் (47), சத்தியமங்கலத்தை அடுத்த உக்கரம், சம நகரைச் சேர்ந்த ரேவதி (46), சரசாள் (62), உக்கரம், வண்டிபாளையத்தைச் சேர்ந்த சுப்ரமணி (65), பவானி தாலுகா, கீழ்வாணி, இந்திரா நகரைச் சேர்ந்த இந்திரஜித் (20), சிவகங்கை மாவட்டம், அரியாண்டிபட்டியைச் சேர்ந்த சோலைராஜன் (36), ஈரோடு, சூரம்பட்டியைச் சேர்ந்த ஈஸ்வரன் (42) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருது 113 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)