Advertisment

ஆணையரின் உத்தரவால் சிக்கிய 11 பேர் சிறையில் அடைப்பு!

11 jailed on commissioner's orders

திருச்சியில் கஞ்சா விற்பனையைத் தடுக்க மாநகரக் காவல்துறை ஆணையர் உத்தரவின்பேரில் மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலைய காவலர்களும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதில் திருச்சி ஏர்போர்ட் ஆர்.எஸ் புரம் பூங்காவில் கஞ்சா விற்றதாக ஏர்போர்ட் திடீர்நகர் அறிவழகன் என்பவரையும், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த ஜோஸ்வா, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அகமது அமானுல்லா, இ.பி.ரோடு பரணிகுமார், மஸ்தான், சிம்சோன், ஆகிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Advertisment

மேலும், அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் கோட்டைப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக கம்பரசம்பேட்டை ராஜசேகர், மேல தேவதானம் வீராசாமி, திருச்சி டவுன் ஹால் கார்த்திகேயன், சங்கரன்பிள்ளை ரோடு கார்த்திக் ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு கிலோ 250 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். 11 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisment

Commissioner order trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe