10th time cave in Vallanad flyover

Advertisment

தூத்துக்குடி தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் பத்தாவது முறையாக ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி தூத்துக்குடி இடையானது வல்லநாடு தாமிரபரணி மேம்பாலம். இந்த மேம்பாலத்தில் அடிக்கடி பள்ளங்கள் நிகழ்வது காரணமாக அதனைச் சீரமைக்க மட்டுமே இதுவரை 13 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. பாலம் கட்டப்பட்ட சில ஆண்டுகளிலேயே எட்டுக்கும் மேற்பட்ட முறை பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பத்தாவது முறையாக பள்ளம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வந்தனர். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கோரிக்கையை அடுத்து தாமிரபரணி மேம்பாலத்தில் ஏற்பட்ட பள்ளத்தை நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சரி செய்து வருகின்றனர்.