Skip to main content

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கக்கோரி ஆசிரியர் சங்கம் மனு!

Published on 18/05/2020 | Edited on 19/05/2020

 

10th public exam issue - Petition in High Court

 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் சங்கம் மனு தாக்கல் செய்துள்ளது.  தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஒன்றாம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.  இந்தத் தேர்வை தள்ளிவைக்கக்கோரி ஸ்டாலின் ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பாதிக்கப்பட்டவர் யாரும் வரவில்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 


இந்நிலையில், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்,  தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத் தலைவர் மாயவன்,  பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார்.  அந்த வழக்கில் ஜூன் ஒன்றாம் தேதி நடத்தப்படவுள்ள தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும்.  தேர்வு நடத்தினால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். உரிய போக்குவரத்து வசதியும் இல்லாத காரணத்தினால் ஜூன் ஒன்றாம் தேதி தேர்வு நடத்தப்படக் கூடாது என்று அந்த மனுவில் கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்த வழக்கு நாளை அல்லது நாளை மறுதினம் விசாரணைக்கு வரவுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.

Next Story

தொடங்கியது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
10th class general exam has started

பன்னிரண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்திருக்கும் நிலையில், இன்று பத்தாம் வகுப்புத் தேர்வுகள் தமிழகத்தில் தொடங்கியுள்ளது.

இன்று தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் எட்டாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மொத்தமாக மாணவர்கள், தனித்தேர்வர்கள், சிறைக் கைதிகள் என 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் தேர்வு 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வில் முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக மாநிலம் முழுவதும் 4,591 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகள் அல்லது நிரந்தரமாகத் தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் விஜய் உள்ளிட்ட பல அரசியல் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.