Advertisment

10ம் வகுப்பு மாணவன் படுகொலை

விழுப்புரம் மாவட்டம் எலவாசனூர் கோட்டை அருகேயுள்ளது அயன் குஞ்சரம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த சேகவன் மகன் சிவக்குமார் (வயது 15). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படிந்து வந்தார். இவர் நேற்று ஞாயிற்றுகிழமை விடுமுறை நாள் என்பதால் சக மாணவர்களோடு விளையாடுவதற்கு மதியம் வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.

Advertisment

Viluppuram

நேரமானால் இவரை பல இடங்களில் உறவினர்கள் தேடி வந்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள வனக்காட்டில் ஒரு இளைஞன் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சிவகுமார் குடும்பத்தினர் ஓடிச்சென்று பார்த்தபோது, அது சிவகுமார்தான் என்பதை தெரியவந்ததும், கதறி துடித்தனர்.

போலீசாருக்கு தகவல் போகவே எலவாசனுர் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி, சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் உட்பட போலீசார் அந்த இடத்துக்கு சென்று சிவகுமார் உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவன் சிவக்குமார் ஏன் காட்டுப் பகுதிக்கு சென்றான். எதற்க்காக கொலை செய்யப்பட்டான். கொலைக்கான காரணம் என்ன? இப்படி பல கோணங்களில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். பட்டப்பகலில் பள்ளி மாணவன் கொலையான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

murder student Viluppuram
இதையும் படியுங்கள்
Subscribe