Skip to main content

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - திருப்பூர் முதலிடம்

Published on 29/04/2019 | Edited on 29/04/2019

 

2019ம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.   இதில், திருப்பூர் மாவட்டம் தேர்ச்சியில் முதலிடம் பிடித்துள்ளது.

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில், மாணவிகள் மற்றும் மாணவர்கள் என மொத்தமாக 95.02% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

 

t


மாணவர்களை காட்டிலும் மாணவிகளே தேர்ச்சியில் 3.7%  பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.   மாணவிகள் 97% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் மாணவர்கள் 93.3% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.  


மாவட்டங்கள் வாரியாக திருப்பூர்  98.53% கொண்டு முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்தப்படியாக இராமநாதபுரம் 98.48% கொண்டு இரண்டாம் இடத்திலும் நாமக்கல் 98.45% கொண்டு மூன்றாம் இடத்திலும் உள்ளது. 


தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, மே-2ஆம் தேதி முதல் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனி தேர்வர்கள், மே-6ஆம் தேதி முதல் http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

நிலைமை சீரடையும் வரை 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்திவைக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

Published on 08/06/2020 | Edited on 08/06/2020
K.Balakrishnan-MLA



10ம் வகுப்பு பொதுத்தேர்வை தற்போது ஒத்தி வைக்க வேண்டுமெனவும், நிலமை சீரடைந்த பிறகு பொதுத்தேர்வை நடத்தலாம் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஜூன் 1ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் பெற்றோர்களும் ஜூன் 1ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தத்கூடாது, ஒத்திவைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததின் அடிப்படையில் ஜூன் 15ம் தேதிக்கு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.


ஆனால், கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் பரவல் அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளும் கூடுதலாகி வருகின்றன. மாணவர்களும் இயல்பான மனநிலையில் இல்லை. இந்த மோசமான சூழ்நிலையில், ஜூன் 15ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது பொருத்தமாக இருக்காது. நோய் பரவல் அதிகரிப்பதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்துவிடும் என்ற அச்சம் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் உள்ளது.


தனிமனித விலகலோடு தேர்வை நடத்த உள்ளோம் என்று அரசு கூறினாலும் கூட, தேர்வை நடத்துவதன் மூலம் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தேர்வை நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு நோய் பரவுவதற்கான அபாயம் உள்ளது. அது மட்டுமில்லாமல், தினசரி நோய் பரவல் அதிகரித்து வருகிற காரணத்தால், மாணவர்களுக்கு இயல்பான தேர்வு எழுதும் மனநிலை இருக்காது. பெற்றோர்களும் அச்சத்துடன்தான் அவர்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டியிருக்கும்.

எனவே, ஜூன் 15ம் தேதி நடைபெற உள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தற்போது ஒத்தி வைக்க வேண்டுமெனவும், நிலைமை சீரடைந்த பிறகு பொதுத்தேர்வை நடத்தலாம் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.