சீனாவில் உருவான கரோனா வைரஸ், தற்போது 170 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் இந்தியாவில் அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. மார்ச் 31ஆம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இந்நிலையில் தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தற்போது ஒத்திவைக்கப்படுவதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இந்த தேர்வுகள் ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கும் என்றும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஏற்கனவே அறிவித்தபடி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். மார்ச் 27 தொடங்க இருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகதற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.